கிங்ஸ்லி சாமுவேல்

Hero Image
Image

சுயவிவரம்

பிறந்த இடம் : திருச்சி

வேரூன்றிய இடம் : திருச்சி

வாழும் இடம் : மிச்சிகன், அமெரிக்கா

பணியிடம் : General Motors, Michigan

மிச்சிகன் தமிழ்ச்சங்கம்

அறங்காவலர் குழு செயலாளர் (2025-26)

அறங்காவலர் குழு (2020-24)

மிச்சிகன் தமிழ்ச்சங்கத் தலைவர் (2020-22)

இலக்கியக் கழகப் பொறுப்பாளர் (2019-20)

மிச்சிகன் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் (2018)

சந்தைப்படுத்துதல் ஒருங்கிணைப்பாளர் (2016)

மிச்சிகன் தமிழ்ப் பள்ளி

தமிழ் ஆசிரியர் (2022-26 )

நிர்வாகக் குழு (2022-26)

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை


பேரவை செயலாளர் (2022-24)

பேரவை இயக்குநர் (2020-22)

உறுப்பினர், இலக்கிய மொழிபெயர்ப்பு (2024 -26)

தலைவர், இலக்கிய மொழிபெயர்ப்பு (2022 -24)

தலைவர், தமிழ் கூறும் தலைமுறை குழு (2020-22)

இணைத் தலைவர், உதவும் இதயங்கள் குழு (2020-22)

உறுப்பினர், சிறப்புத் திறன் குழந்தைகள் குழு (2020-22)

உறுப்பினர், சங்கங்களின் சங்கமம் குழு (2020-22)

உறுப்பினர், மக்கள் தொடர்புக் குழு (2020-22)

உறுப்பினர், அன்புடை நெஞ்சம் குழு (2021-22)

உறுப்பினர், பேரவை விழா நிகழ்வுக் குழு (2021, 2022)

ஒருங்கிணைப்பாளர், பேரவை விழா சேர்ந்திசை நிகழ்ச்சி (2022)

ஒருங்கிணைப்பாளர், பேரவை விழா கருத்துக்களம் நிகழ்ச்சி (2022)

உறுப்பினர், பேரவை விழா மரபுக்கலைகள் குழு (2022)

உறுப்பினர், பேரவை விழா மலர் குழு (2021)

உறுப்பினர், பேரவை விழா இணை அமர்வுகள் குழு (2019)

Image
Image

இதுவரை செய்த பணிகள்..

குறள் பேழை - திருக்குறளை காணொளி வாயிலாக ஆவணப்படுத்தும் முன்னெடுப்பு (2019)

குறுந்தொகை குழு - குறுந்தொகை பாடல்கள் முழுவதையும் படித்து உணர குழு அமைத்து செயலாற்றல் (2019)

வேள்பாரி - வரலாற்று நாடகத்தை 50+ தன்னார்வலர்களின் துணையோடு மேடையில் அரங்கேற்றம் (2020)

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு திங்கள் - என்று மிச்சிகன் அரசு அறிவிக்க முன்னெடுப்பு (2021 & 2022)

பேச்சாளர்கள் குழு - மாதம் இருமுறை தொடர் பேச்சுப் பயிற்சி பட்டறை நடத்தி பல்வேறு பேச்சாளர்களை உருவாக்குதல் (2021)

எழுத்துப் பட்டறை - சிறு குழுக்கள் அமைத்து வாசிப்பு மற்றும் எழுத்து ஊக்குவித்தல் (2021)

இலக்கிய மொழிபெயர்ப்பு - நவீன தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தல் (2022)

டொரண்டோ மற்றும் ஹியூஸ்டன் தமிழ் இருக்கை நிதி திரட்டல் நிகழ்வு ஒருங்கிணைப்பு (2021)

$2 மில்லியன் அமெரிக்க வெள்ளி கோவிட் தொற்று கால நிதி திரட்டல் நிகழ்வு ஒருங்கிணைப்பு (2021)

மத்திய மேற்கு மாகாணங்களில் உள்ள ஏழு தமிழ்ச் சங்கங்களுக்கு திருவள்ளுவர் சிலைகளை கொண்டு சேர்த்தல் (2021)

தொல்காப்பியர் நாள் விழா மற்றும் இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் சங்க இலக்கிய சேர்ந்திசை நிகழ்வு ஒருங்கிணைப்பு (2021)

"தமிழ் மொழி மற்றும் பண்பாடு திங்கள்" அரசு அறிவிப்புபெற பல்வேறு தமிழ்ச்சங்கங்களுக்கு வழிகாட்டி உதவி செய்து (2020-22)

தமிழ்கூறும் தலைமுறை குழுவின் வழியாக 200+ சிறுவர்களுக்கு தமிழ்ப்பேச்சு பயிற்சிப்பட்டறை மற்றும் போட்டிகள் ஒருங்கிணைத்தல் (2020-22)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைப்பிற்கு உதவி செய்தல் (2022)

மக்கள் தொடர்பு குழுவின் வழியாக பேரவை நிகழ்வுகளை சங்கங்களுக்கு சமூகவலைத்தளங்கள், செய்திமடல் வழியாக அறிவித்தல் (2020-22)

சங்கங்களின் சங்கமம் குழு வாயிலாக பல்வேறு சங்கங்களின் தனிச்சிறப்புகளை மற்றவருக்கு கொண்டுசேர்த்தல் (2020-22)

அன்புடைநெஞ்சம் குழுவின் சேவையை பறைசாற்ற காணொளி மற்றும் பரப்புரை ஆவணம் உருவாக்குதல் (2021-22)

பேரவை விழாவின் சங்கஇலக்கிய சேர்ந்திசை நிகழ்ச்சியை திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல் (2022)

பேரவை விழாவின் கருத்துக்களம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தல் (2022)

பேரவை இணையவழி விழா ஒருங்கிணைப்பிற்கு பேருதவி செய்தல் (2021)

பேரவை தொழில்முனைவோர் மாநாடு சென்னையில் ஒருங்கிணைப்பு (2023)

பேரவையின் உதவும் இதயங்கள் குழுவின் வழியாக நெருக்கடி சூழலில் இருந்தவர்களுக்கு உரிய உதவிகளை செய்தல் (2019-2024); மனநல மேம்பாடு மற்றும் தற்கொலை விழிப்புணர்வு நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு (2023)

தற்காலதமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து “The Trove” என்ற நூல் வெளியீடு (2022-24)

ஒடுக்கப்பட்ட மக்கள் நலக்குழு வழியாக மதுரையில் உள்ள நலிந்த இசைக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் வழங்க உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நலதிட்டப் பணிகள் (2022-24)

இனி செய்ய விரும்பும் பணிகள்..

சட்டக் கோப்பு விதிகளில் தெளிவான திருத்தங்கள்

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட குழப்பங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, பேரவையின் சட்டக் கோப்பு விதிகள் தெளிவாகவும் நடைமுறைக்கு ஏற்றவாறும் திருத்தப்படும்.

உறுப்பினர் சங்க இணைப்பு முறைகளின் மறுசீராய்வு

புதிய உறுப்பினர் சங்கங்களை இணைக்கும் வழிமுறைகள், தகுதிகள், வரையறைகள் மற்றும் பிரதிநிதித்துவக் கொள்கைகள் மறுசீராய்வு செய்யப்படும்.

ஒவ்வொரு தமிழ் சங்கத்திற்கும் நேரடி நிதி உதவி

பேரவை மூலமாக ஒவ்வொரு உறுப்பினர் தமிழ் சங்கத்திற்கும் நேரடியாக நிதி உதவி கிடைக்கும் வகையில் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வணிகர்கள்–சங்கங்கள் இணைப்பு திட்டம்

வட அமெரிக்க அளவில் உள்ள தமிழ் வணிகர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு தமிழ் சங்கத்திற்கும் கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை உருவாக்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

சங்கங்களுக்கு தேவையான சேவைகளுக்கான ஒருங்கிணைந்த ஆதரவு குழு

அச்சு, வாழையிலை, இணையதள மேம்பாடு, இந்தியாவிலிருந்து பொருட்கள் கொண்டு வருதல், வரி சார்ந்த ஆலோசனை, சட்ட ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் ஒரே குழுவின் வழியாக சங்கங்களுக்கு வழங்கப்படும்.

சங்க உள் பிரச்சனைகளுக்கான சிறப்பு குறைதீர்க்க குழு

தமிழ் சங்கங்களில் ஏற்படும் உள் பிரச்சனைகள், நிர்வாக சிக்கல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சமரசமாக தீர்க்க சிறப்பு குறைதீர்க்க குழு அமைக்கப்படும்.

பேரவை விழா செலவுகளை குறைக்கும் முன்னெடுப்புகள்

பேரவை விழாவில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைத்து, சேமிக்கப்படும் நிதியை சங்கங்களின் வளர்ச்சிக்கும் பயனுள்ள திட்டங்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பேரவை விழா நுழைவு கட்டணம் குறைக்கப்படும்

பேரவை விழாவில் அனைத்து குடும்பங்களும், இளைஞர்களும், தன்னார்வலர்களும், சங்க பிரதிநிதிகளும் எளிதாக பங்கேற்கும் வகையில் நுழைவு கட்டணம் குறைக்கப்படும்.

சிறப்பு விருந்தினர்கள் ஒருங்கிணைப்பு குழு

தமிழ் சங்கங்களுக்கு தேவைப்படும் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க தனிக் குழு அமைத்து, அனைத்து சங்கங்களுக்கும் தேவையான உதவி வழங்கப்படும்.

ஒற்றுமையை முன்னிறுத்தும் அனைவரையும் இணைக்கும் நிர்வாகம்

பல்வேறு கருத்துகள் கொண்டவர்களையும் மதித்து, அனைவரையும் ஒன்றிணைத்து, பேரவையின் அனைத்து குழுக்களிலும் தகுதியானவர்களுக்கு பங்களிக்கும் வாய்ப்பு வழங்கி, ஒற்றுமை மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும்.